×

வாடகை பாக்கி கடைகளுக்கு சீல் வைக்க முடிவு

தேவகோட்டை, செப்.6: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை நகராட்சிக்கு சொந்தமான 139 வாடகைக்கடைகள் உள்ளன. பஸ்நிலையப்பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் வருடக்கணக்கில், மாதக்கணக்கில் என வாடகை செலுத்தாது நிலுவையிலேயே இருக்கிறது. நகராட்சி கடைகள் 139 என இருந்தாலும் அந்தக்கடைகளை ஏலம் எடுத்தவர்கள் ஒரு கடையை நான்கு கடைகளாக மாற்றி உள் வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

நகராட்சிக்கு ஒரு கடைக்கு ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே வாடகை என கணக்கிட்டு ஏலம் எடுக்கின்றனர். வருடத்திற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையினை உள்வாடகைக்கு நாள்வாடகைக்கு கைமாற்றி பல லட்சங்களை வாடகையாக பெறுகின்றனர். அப்படியிருந்தும் நகராட்சிக்கு வாடகை செலுத்தாது ஏமாற்றி வருகின்றனர். வாடகை பாக்கிக்காக ஏற்கனவே 28 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆணையாளர் பார்கவி, மானேஜர் ராஜேஷ்வரன், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாடகை பாக்கி கடைகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து வாடகைக்கடையில் உள்வாடகை கொடுத்து கடை நடத்தும் வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் அன்றாடம் ஆயிரம், ஐநூறு என கடையை ஏலத்திற்கு எடுத்தவர்களுக்கு கப்பம் கட்டுவதுபோல் செலுத்தி வருகிறோம்.
ஆனால் அவர்கள் நகராட்சிக்கு பணம் கட்டுவது கிடையாது. இவ்விஷயத்தில் நாங்கள் பலிகடாக்களாகி வருகிறோம். எனவே கடை நடத்துபவர்களுக்கே நகராட்சி உரிமம் வழங்கி நகராட்சி நிர்ணயித்த வாடகையினை நாங்கள் நேரிடையாக செலுத்தினால் நகராட்சிக்கு வருமானமும் உயரும். இப்போது நடைபெறும் மோசடி தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

The post வாடகை பாக்கி கடைகளுக்கு சீல் வைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Dinakaran ,
× RELATED கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை